×

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 10,000 கனஅடியிலிருந்து 11,000 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 10,000 கனஅடியிலிருந்து 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 12ம் தேதி முதல்(26 ஜூன்) இன்று வரை வினாடிக்கு 10,000 கனஅடி வீதமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று 3 மணி முதல் தண்ணீர் திறப்பு 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், விவசாயிகளின் தேவைக்கேற்றவாறும், மழை பொழிவிக்கேற்றவாறும் மாற்றியமைக்கப்படும். தற்பொழுது அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படும் காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 10,000 கனஅடியிலிருந்து 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 10,000 கனஅடியிலிருந்து 11,000 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Delta ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...