×

மெர்சிடிஸ் ஏஎம்ஜி எல்எல்55

மெர்சிடிஸ் நிறுவனம் புதிய எஸ்எல்55 ஏஎம்ஜி ரோட்ஸ்டர் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.35 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7வது தலைமுறை காராக இந்தியச் சந்தைக்கு வந்துள்ள இது, 3 ஆண்டுக்கு முன்பு நடந்த உலக வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 473 பிஎச்பி பவரையும் 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

100 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 295 கி.மீ வேகம் வரை செல்லும். மேலும் இந்த காரில் உள்ள கூரையை தேவைப்படும்போது திறந்து கொள்ளலாம். 15 நொடிகளில், அதாவது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் திறந்து மூடக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 11.9 அங்குல எம்பியுஎக்ஸ் தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், பாதசாரிகள் பாதுகாப்பு, சாலையில் வழித்தடம் மாறாமல் செல்ல உதவும் தொழில்நுட்பம் உட்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

The post மெர்சிடிஸ் ஏஎம்ஜி எல்எல்55 appeared first on Dinakaran.

Tags : Mercedes ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்