×

உடல் நலம் குன்றியிருந்த பாஜக எம்பி திடீர் மரணம்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே (74), கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இத்தகவலை அவரது மகன் பிரன்ஷு துபே தெரிவித்தார்.

உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவரான ஹர்த்வார் துபேவின் மறைவிற்கு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து இன்று மதியம் எம்பி ஹர்த்வார் துபேயின் உடல் ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post உடல் நலம் குன்றியிருந்த பாஜக எம்பி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,BJP Rajya Sabha ,Uttar Pradesh ,Hardwar Dubey ,
× RELATED கருத்து கணிப்புகளை கதறவிட்ட மக்கள்