×

விரைவில் பருவமழை பெய்ய வாய்ப்பு ஆழியார் அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

*60க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொள்ளாச்சி : விரைவில் பருவமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் சூழலில் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில், மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு, பேரிடம் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து, மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு அவ்வப்போது விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம், பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையின் ஒரு பகுதியில், கோவை தொப்பம்பட்டியில் உள்ள மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு, பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

சுமார் 60க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இதில், நிலநடுக்கம், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், தண்ணீரில் அடித்து செல்பவர்களை எப்படி மீட்பது என்று கயிறு கட்டியும், படகு மூலமும், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் மூலம் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து பயற்சி அளிக்கப்பட்டது. ஆழியார் அணைப்பகுதியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் நடத்திய பேரிடர் ஒத்திகை பயிற்சியை, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து பயன்பெற்றனர்.

The post விரைவில் பருவமழை பெய்ய வாய்ப்பு ஆழியார் அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Central Reserve Force Police ,Aliyar Dam ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...