×

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பயணமாகும் வாழைத்தார்கள்

*கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தற்போது கேரளாவுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்றும் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து சற்று அதிகமாக இருந்தது.

இதில் நேற்று நடந்த சந்தை நாளில், தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் வரத்து மிகவும் இருந்துள்ளது. சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்தே ஓரளவு வாழைத்தார் வரத்து இருந்துள்ளது. வாழைத்தார்களின் வரத்து குறைவால், வியாபாரிகள் கூடுதல் விலைக்கு வாங்கி சென்றனர். சுமார் 60 சதவீத வாழைத்தார்கள் விற்பனைக்காக, கேரள மாநில பகுதிக்கு சரக்கு வாகனத்தின் மூலம் ஏற்றி செல்லப்பட்டது.

இதில், செவ்வாழைத்தார் ( 1 கிலோ) ரூ.45 முதல் ரூ.52 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.38க்கும், பூவந்தார் ரூ.38க்கும், ரஸ்தாளி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.35க்கும், கேரள ரஸ்தாளி மற்றும் நேந்திரன் 1 கிலோ ரூ.45க்கும் என கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பயணமாகும் வாழைத்தார்கள் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Keralava ,Pollachi Gandhi Market ,Kerala ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...