×

தனது 36வது பிறந்தநாளில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: சொந்த ஊரில் நடந்த நட்பு ரீதியான போட்டியில் அபாரம்

அர்ஜென்டினா: தனது 36வது பிறந்தநாளில் சொந்த ஊரில் நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரோசரியோவில் நியூ வில்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் அர்ஜென்டினா அணி விளையாடியது. இந்த போட்டி அர்ஜென்டினா அணியின் மூத்த வீரரான மாக்சி ரோட்ரிகஸ்யின் ஓய்வை ஒட்டி நடைபெற்றது.

தனது 36வது பிறந்த நாளிலும் அமைந்து போன இந்த போட்டியில் லயோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் 4வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக்கில் 20 அடி தூரத்தில் இருந்து அற்புதமாக அவர் அடித்த முதல் கோல் மைதானத்தில் கூடியிருந்த 42 ஆயிரம் ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அடுத்து அதே போல் மெஸ்ஸி தனது அடுத்தடுத்த இரு கோல்களையும் கோல் கீப்பரின் தலைக்கு மேல் வலைக்குள் அனுப்பி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

The post தனது 36வது பிறந்தநாளில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்: சொந்த ஊரில் நடந்த நட்பு ரீதியான போட்டியில் அபாரம் appeared first on Dinakaran.

Tags : Messi ,Argentina ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...