×

செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்க ஆரம்பிக்கவில்லை. திட உணவு வழங்கப்படுகிறது :காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் 20 நாட்கள் மருத்துவமனையில், மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தனர்.

அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 15ம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் 21-ம் தேதி இதய நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு, செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்துக் கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி குழாய் வழியாக உணவு எடுத்துவந்த நிலையில், இன்று அவரே உணவு எடுத்துக்கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார். செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்க ஆரம்பிக்கவில்லை. திட உணவு வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி நடக்க தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது.செந்தில் பாலாஜி முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப 15 முதல் 20 நாட்கள் ஆகலாம். அதுவரை அவர், மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் தான் இருப்பார்,” என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

The post செந்தில் பாலாஜி தானாக எழுந்து நடக்க ஆரம்பிக்கவில்லை. திட உணவு வழங்கப்படுகிறது :காவேரி மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Kaveri Hospital ,Chennai ,Minister ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...