×

நாமக்கல் அருகே 1,500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அருகே 1,500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேடர்பாளையத்தை அடுத்து சின்ன மருதூர் பகுதியில் சௌந்தர் ராஜன் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்புக்குள் நள்ளிரவில் புகுந்த நபர்கள் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர். மேலும் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாய மோட்டார் பம்பு செட்டுகளை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்.

சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தடையங்களை சேகரித்துள்ள போலீசார் 8 தனிப்படை அமைத்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக விவசாய கொட்டகைகளுக்கு தீ வைப்பது பம்பு செட்டுகளை சேதப்படுத்துவது, டிராக்டர்களுக்கு தீ வைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post நாமக்கல் அருகே 1,500-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Jaderpalayam ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...