×

பாகுபலி யானையின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளது: வனத்துறையினர் தகவல்

மேட்டுப்பாளையம்: பாகுபலி யானையின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளது என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஹூலிகல் பகுதியில் சுற்றிவரும் பாகுபலி யானையை வனத்துறை கண்காணித்து வருகிறது. முறையாக உணவருந்தி பழைய வேகத்தில் பாகுபலி யானை நகர்ந்து வருவதாகவும் பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க மருந்து செலுத்த மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நீண்டகாலமாக பாகுபலி யானையின் வாய்ப்பகுதியில் நோய் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை அளிக்க திட்டம் உள்ளது என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post பாகுபலி யானையின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் உள்ளது: வனத்துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Baahubali ,Mettupalayam ,department ,Dinakaran ,
× RELATED வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம்