×

முருகன் திருத்தலங்கள்

1பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி திருக்கோலத்தில், அதேசமயம் தம்பதி சமேதராக முருகப் பெருமானை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம் – உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.

2பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகப் பெருமானை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

3பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். முருகன் உத்தரவுப்படை வைக்கப்பட்ட பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம். இத்தலத்தை சிவன்மலை என்றும் அழைக்கின்றனர்.

4கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது ஆரோகணித்து வீற்றிருக்கிறார் முருகப் பெருமான்.

5கையில் கரும்பேந்தி அருளும் கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

6குறமகளான வள்ளியம்மையுடன் முருகப் பெருமான் கருவறையில் வீற்றிருக்கும் அற்புத தரிசனத்தை குமரி மாவட்டம், தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் தரிசிக்கலாம்.

7மாமல்லபுரம் – கல்பாக்கம் பாதையில் உள்ள திருப்போரூரில் என்றும் வற்றாத திருக்குளத்துடன் கூடிய ஆலயத்தில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியான முருகப் பெருமானை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில், முருகப் பெருமானுக்குச் சமமாக போற்றப்படுகிறது.

8தென்காசியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கோயில் குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய அழகே உருவான முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.

9திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ள விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்தபடி முருகப் பெருமான் அருள்கிறார். அவருக்கு இரு புறமும் வள்ளியம்மையும், தெய்வானையும் நின்றிருக்கிறார்கள்.

10அருணகிரிநாதருக்கு திருப்புகழைப் பாடும் திறமையை அருளிய முருகப் பெருமானை திருச்சிக்கு அருகே உள்ள வயலூர் திருத்தலத்தில் கண்டு மகிழலாம்.

11திருவாரூரிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப் பெருமான் கட்சியளிக்கிறார்.

12காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

The post முருகன் திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Lord ,Muruga ,Borthalapati Thirukolam ,Tenserigiri Thalam ,Itthalam Palladam ,Shrines ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்