×

மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரின் மைத்துனர் கைது

திருவண்ணாமலை: மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரின் மைத்துனர் ஜீவா கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ராணுவ வீரர் பிரபாகரன் இவரது மனைவி கீர்த்தி ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் குன்னூத்துர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் கடையில் மேல்வாடகை எடுத்து பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார்.

இந்த கடை சம்பந்தமாக ராணுவ வீரர் பிரபாகரன் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமு என்பவருக்கும் பிரச்சனை பலமாதங்களாக இருந்து வந்துள்ளது. கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதாகவும் கடைக்கு கொடுக்கப்பட்ட ரூ.9 லட்சம் திருப்பி கொடுக்க ராணுவ வீரரின் மனைவி ராமுவை கேட்டதாக தெரியவந்தது. இப்பிரச்சினை காரணமாக சந்தவாசல் காவல்நிலையத்தில் இரண்டுபேரும் புகார் அளித்துள்ளனர். அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை என்று ராணுவ வீரர் பிரபாகரன் ராணுவ உடையில் தனது மனைவியை மானபங்கம் படுத்தியதாகவும் தனது மனைவிக்கு பாதுக்காப்பு கொடுக்கும்படி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டபட்டு பின்னர் ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ வெளியிட்டார்.

இதன் அடிப்படையில் ராமு தரப்பினர் அரிபிரசாந்த் மற்றும் செல்வராஜ் இரண்டு பேர் கைது செய்திருந்த நிலையில் ராணுவ வீரரின் தரப்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. சதித்திட்டம் தீட்டிய ஆடியோ வெளியான நிலையில் ஜீவா மற்றும் உதயாவை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். ஆரணியை அடுத்த படவேட்டில் இடத்தகராறு தொடர்பாக ராணுவ சீருடையில் பிரபாகரன் வீடியோ வெளியிட்டிருந்தார். தனது மனைவி அவமதிக்கப்பட்டதாக நிலையில் விசாரணையில் அது பொய் என்பது உறுதியானது. பிரபாகரன் செல்போனில் சதித்திட்டம் தீட்டிய ஆடியோ வெளியான நிலையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரின் மைத்துனர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvanna ,Namalai ,Jeeva ,Tiruvandamalai District ,Arani ,
× RELATED மதுரவாயலில் லாரி மோதி மாணவன் பலி