×

நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், ஆனால் அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில் இருக்கும் : மல்யுத்த வீராங்கனைகள்!!

டெல்லி : பாஜக எம்.பி.பிரிஜ் பூஷணுக்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போராட்டம் இன்று சாலைகளில் தொடராது, நீதிமன்றத்தில் தொடரும் என வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் “இந்த வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் ஆனால் அந்த போராட்டம் நீதிமன்றத்தில் இருக்கும். சாலையில் அல்ல. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சட்டரீதியான போராட்டம் தொடரும்,”எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிது காலத்திற்கு சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் மூவரும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

The post நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், ஆனால் அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில் இருக்கும் : மல்யுத்த வீராங்கனைகள்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bajaka M. GP ,Brij Pushan ,Vinesh Bogat ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து