×

அனைத்து அரசு, நிதியுதவி பள்ளிகளில் புன்னகை திட்டம் செயல்படுத்த முடிவு மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை சென்னை பெருநகரை தொடர்ந்து

வேலூர்: சென்னை பெருநகரை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு புன்னகை திட்டத்தின் கீழ் தொடர்ந்து பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பெருமளவில் படித்து வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் அவர்களுக்கான பல் பராமரிப்பை உறுதி செய்ய புன்னகை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் சென்னை பெருநகரம் உள்ளடங்கிய சென்னை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் படித்து வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பல் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பற்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அனைத்து அரசு, நிதியுதவி பள்ளிகளில் புன்னகை திட்டம் செயல்படுத்த முடிவு மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை சென்னை பெருநகரை தொடர்ந்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolis ,Borough ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...