×

மெஞ்ஞானபுரத்தில் தரமற்றதாக அமைத்ததால் சாய்ந்து விழுந்த சாலை விழிப்புணர்வு பதாகைகள்

உடன்குடி: உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு பதாகைகள் தரமற்ற முறையில் நடப்பட்டதால் சரிந்து கிடக்கிறது. சரியான முறையில் கான்கீரிட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மிகுந்துள்ள வாகனப் போக்குவரத்து அதிகளவில் காணப்படுவதால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதன் காரணமாக உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்புகள் ஏற்படுகிறது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் முக்கிய இடங்களில் ஆங்காங்கே மெகா சைஸ் சாலை விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தனர். அதில் சீட் பெல்ட் அணிவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டக்கூடாது, வளைவு பகுதி என பல்வேறு சாலை விழிப்புணர்வு வாசகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மெஞ்ஞானபுரத்திலிருந்து சாத்தான்குளம் செல்லும் சாலை ஓரங்களில் மெகா சைஸ் சாலை விழிப்புணர்வு பாதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 5ம்தேதி மெஞ்ஞானபுரம் பகுதியில் திடீரென வீசிய சூறாவளி காற்றில் மெகா சைஸ் சாலை விழிப்புணர்வு பதாகை கீழே சரிந்து விழுந்தது. சுமார் 15அடி உயரம் உள்ள போர்டை சுமார் ஒரு அடி ஆழம் கூட தோண்டாமல், சரியான படி கான்கீரிட் போட்டு அமைக்காமல் ஏனோ தானோவென்று நட்டு விட்டு சென்றுவிட்டனர். இதன் விளைவு அந்த போர்டு காற்றில் அடியோடு கான்கிரீட்டுடன் சாய்ந்து விழுந்தது. நல்ல வேளையாக எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் அந்த சாலையின் ஓரத்தில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து முறையாக விழிப்புணர்வு பதாகைகள் சரியான ஆழம் தோண்டி முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில்

The post மெஞ்ஞானபுரத்தில் தரமற்றதாக அமைத்ததால் சாய்ந்து விழுந்த சாலை விழிப்புணர்வு பதாகைகள் appeared first on Dinakaran.

Tags : Menjnanapuram ,Ebengudi ,Dinakaran ,
× RELATED பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பரிதாப பலி