×

ஒட்டன்சத்திரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரத்தில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று மினி மாரத்தான் நடைபெற்றது. ஒட்டன்சத்திரத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை நகர செயலாளர் வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் துவங்கிய இந்த மாரத்தான் தாராபுரம் சாலை, நாகனம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக மீண்டும் காவல் நிலையத்தில் முடிவுக்கு வந்தது.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தாசில்தார் முத்துச்சாமி, டிஎஸ்பி முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், வெள்ளையன், முன்னாள் அரசு தலைமை மருத்துவர் ஆசைத்தம்பி, தேசிய மாணவர் படை அலுவலர் பால்பாண்டியன், நல்லாசிரியர் சவுடமுத்து, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தர பாண்டியன், எஸ்.ஐக்கள் சூரியகலா, கவுசல்யா, சரவணகுமார், சிவராஜ், பாலகுருசாமி, குமாரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.

Tags : Anti-Drug Awareness Marathon ,Otanchatram ,Otanchatra ,Drug Eradication Awareness Marathon ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால்...