×

செம்பட்டி அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

நிலக்கோட்டை, ஜூன் 26: செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாணிக்கவாசகர் மற்றும் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு நதிகளிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், தாரை தப்பட்டை வாண வேடிக்கை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலையில் வைத்து மாலை கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்துசாந்தி பூஜைகள் மற்றும் யாக வேள்வி நடைபெற்றது.

நேற்று காலை மஹா தீபாராதனை, யாத்திராதானம், உயிரூட்டல் நிகழ்ச்சியுடன், கலசம் புறப்பாடு நிகழ்ச்சியை அடுத்து சிவாச்சாரியர்களால் மாணிக்கவாசகர் மற்றும் கருப்பணசாமி கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாணிக்கவாசகர் மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன், உமாமகேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை மாணிக்கவாசகர் கோயில் பங்காளிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post செம்பட்டி அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Manikkavasagar ,temple Kumbhabhishekam ,Sembatti ,Nilakottai ,Karuppanaswamy Temple Kumbabhishekam ,Balayankottai ,Manikkavasakar Temple Kumbhabishekam ,
× RELATED செம்பட்டி அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை