×

தொடர் ஓட்டத்தில் மாணவன் சாதனை

 

பரமக்குடி, ஜூன் 26: உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகரில் இந்திய தடகள சங்கம் சார்பில் ஆசிய அளவிலான யூத் சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடந்தது. இதில் பரமக்குடி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர் சரண் 400 மீட்டர் மெட்லி தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். சர்வதேச தடகள சங்கம் சார்பில் தென் கொரியாவில் ஜூன் 4 முதல் 7 வரை நடந்த ஆசிய தடகள போட்டியில் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மாணவர் சரண், வெற்றிக்கு உதவிய பயிற்சியாளர் அருண் ஆகியோரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவரை பரமக்குடியைச் சேர்ந்த பொது அமைப்புகள், விளையாட்டு கிளப் நிர்வாகிகள் பலர் பாராட்டினர்.

The post தொடர் ஓட்டத்தில் மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Asian level ,Indian Athletics Association ,Tashkent ,Uzbekistan ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்