×

கோவை வடவள்ளியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதிய கிளை திறப்பு

 

கோவை, ஜூன் 26: கோவை வடவள்ளியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் தனது கிளைகளைத் திறந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி எதிரில் எம்.ஜி காலனியில் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி குத்து விளக்கு ஏற்றி ஷோரூமை திறந்து வைத்தார்.

பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முதல் விற்பனையை துவக்கி வைக்க, கந்தசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் ராம்ராஜ் காட்டன் தலைமை செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி மற்றும் ஷோரூம் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவை வடவள்ளியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ramraj Cotton ,Coimbatore Vadavalli ,Coimbatore ,Showroom ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...