×

கடமலைக்குண்டு அருகே களைகட்டிய கோயில் கும்பாபிஷேகம்

வருசநாடு, ஜூன் 26: கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தில் பட்டாளம்மன் மற்றும் கருப்பசாமி கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் குமணன்தொழு கிராமத்தில் தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. அதேபோல குமணந்தொழு கிராமத்தில் இருந்து கோயில் வரை பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை கணபதி ஹோமம், அனுக்கை வருணம், யாகசாலை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பட்டாளம்மன், கருப்பசாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு, பொன்னன்படுகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி தங்கப்பாண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்ச காளை ஆகியோர் கலந்து ெகாண்டனர். ஏற்பாடுகளை கிராம விழாக் குழுவினர்கள் பெத்துராஜ், நடராஜ், பூசாரிகள் ராஜா, சின்னப்பொன்னன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post கடமலைக்குண்டு அருகே களைகட்டிய கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbaphishekam ,Kamalakkunga ,Varasanadu ,Kumbapishekam ,Pattalamman ,Karupasamy ,Gumanandolu ,Kamalayakungu ,Kumbapisha ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது