×

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2023ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது, விளையாட்டில் சாதனை புரிந்த பெண்மணிக்கு சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு சாதனை புரிந்த பெண்கள் அதற்கான சான்றுகளுடன் விருதினை பெற விண்ணப்பங்களை 30.6.2023க்குள் என்ற ஆன்லைன் முகவரியில் சமர்ப்பிக்க, கடிதம் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்த நகலினை 28.6.2023க்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்கலால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை-03 முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்