×

பழவேற்காட்டில் கடல், ஏரியில் மீன் பிடிக்க பதிவு செய்ய வேண்டும்: மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

 

பொன்னேரி, ஜூன் 26: கடலோர மேலாண்மை திட்ட வரைவு வரைபடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் மற்றும் ஏரியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் இடங்களை பதிவு செய்ய வேண்டும் என மீனவர் சங்கம் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கக் கூட்டம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் துரை.மகேந்திரன் தலைமையில் நேற்று காலை நடந்தது. சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பழவேற்காட்டில் சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மணிமண்டம் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், கடலோர மேலாண்மை திட்ட வரைவு வரைபடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் மற்றும் ஏரியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் இடங்களை பதிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் வலியுறுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

The post பழவேற்காட்டில் கடல், ஏரியில் மீன் பிடிக்க பதிவு செய்ய வேண்டும்: மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Palavekkad ,Ponneri ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...