×

திருவள்ளூர் திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீதர்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

 

திருவள்ளூர், ஜூன் 26: திருவள்ளூர் நகரத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம், நேதாஜி சாலையில் அமைந்துள்ள திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 23ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கப்பட்டு இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, விசேஷ சாந்தி தத்வார்சனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜை, மகா சங்கல்பம், விசேஷ ஹோமம் மகாபூர்ணகதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து புரோகிதர்கள் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு, யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்ட தீர்த்த குடங்கள் மங்களமேல வாத்தியத்துடன் கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகரமன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், முன்னாள் நகர மன்ற தலைவர்கள் கமாண்டோ பாஸ்கரன், ராசகுமார் மற்றும் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், திருப்பாச்சூர், பெரியகுப்பம், மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள முக்தீஸ்வரர், பொன்னியம்மாள், படவேட்டம்மன்,ஸ்ரீ வைத்திய வீரராகவர், வேம்புலியம்மன், கோலம்கொண்ட அம்மன், அங்காளம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்களில் இருந்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் விழாக் குழுவினர்கள் ஏ.பிரகாசம், பி.வி.எஸ்.சண்முகம், டி.என்.ஆர்.சீனிவாசன், பொன் பாண்டியன், வீரராகவன், எஸ்.ரங்கன், எம்.மன்னார், ஏ.பி.எஸ்.பாபு, பெரும்பாக்கம் பாஸ்கர், வளையாபதி, ரகு, எஸ்.எஸ்.சரவணன், சக்தி ரங்கன், கோயில் பூசாரிகள் ஆறுமுகம், தமிழ் அரசு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருவள்ளூர் திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீதர்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Maha Kumbabhishek ,Thiruvallur Draupadi Ambal Sametha Sridharmaraja Temple ,Sami ,Thiruvallur ,Draupadi Ambal Sametha Sri ,Netaji Road ,Perumbakkam ,Tiruvallur city ,Maha Kumbabishek ,Sami Darshanam ,
× RELATED சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா