×

மோடியின் பயணத்தால் இந்தியா -அமெரிக்கா நட்புறவில் புதிய அத்தியாயம் துவக்கம்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பெருமிதம்

வாஷிங்டன்: பிரதமர் மோடியின் பயணத்தால் இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது இருநாடுகளிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, முக்கிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றுவது குறித்து பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படி அமெரிக்க தொழில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இந்தியா, அமெரிக்கா உறவில் ஒரு திருப்புமுனை. இருநாடுகளிடையேயான நட்புறவு உண்மையானது. மிகவும் ஆழமானது. பிரதமர் மோடி, அதிபர் பைடன் இடையேயான தனிப்பட்ட உறவு, அரசு சார்ந்த ஒத்துழைப்பு, இருநாடுகளின் மக்களிடையேயான ஒற்றுமை, தொழில் சார்ந்த உறவுகள் உள்ளிட்டவை எதிர்பார்ப்புகளை கடந்து முன்னேறி உள்ளது. இருநாடுகளின் நட்புறவு உலக நாடுகளின் எதிர்கால நன்மையை உள்ளடக்கியது. இந்த உறவை மேலும் ஆழப்படுத்தினால் உலக நாடுகள் வளர்ச்சி அடையும். இது புதிய அத்தியாயத்தின் தொடக்கம். இது நிச்சயம் வரலாற்றில் முக்கிய இடம்பெறும்” இவ்வாறு கூறினார்.

The post மோடியின் பயணத்தால் இந்தியா -அமெரிக்கா நட்புறவில் புதிய அத்தியாயம் துவக்கம்: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,US ,Ambassador ,Eric Garcetti ,Washington ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி