×

ஆப்கான் பெண்களின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை: தலிபான் தலைவர் உறுதி

இஸ்லாமாபாத்: தலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உயர்நிலை பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைகழகங்கள் ஆகியவற்றில் அவர்களை அனுமதிப்பது இல்லை. இந்நிலையில்,ஈத் பண்டிகையையொட்டி தலிபான்களின் தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தலிபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உள்பட பெண்ளுக்கு எதிரான பாரம்பரிய நடைமுறைகளை அகற்றுவதற்கு பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஷரியத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் அவர்கள் வசதியாகவும், வளமாகவும் வாழ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

The post ஆப்கான் பெண்களின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை: தலிபான் தலைவர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Taliban ,Islamabad ,Afghanistan ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி