×

மணிப்பூரில் ராணுவத்தினரை சுற்றி வளைத்த கிராம மக்கள்:கைது செய்த 12 பேர் விடுவிப்பு

இம்பால்: மணிப்பூரில் பெரும்பான்மை சமூகத்தினரான மெய்டீசுக்கு பழங்குடியினர் அந்தஸ்து தர எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குக்கி பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களால் மணிப்பூரில் கடந்த 55 நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. ராணுவம் குவிக்கப்பட்டும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் மணிப்பூரின் இதம் கிராமததில் தடை செய்யப்பட்ட கங்லி யாவோல் கண்ண லுப் என்ற மெய்டீஸ் இன அமைப்பை சேர்ந்த 12 பேரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அங்கிருந்து ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்ல ராணுவத்தினர் முயன்றனர. அப்போது, பெண்கள் தலைமையில் 1200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராணுவத்தினரை சுற்றி வளைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ராணுவத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானப்படுத்த முடியவில்லை. இரவு முழுவதும் கிராமமக்கள் ராணுவத்தினரை முற்றுகையிட்டனர். தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் மத்தியில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் இருந்ததால், கைது செய்யப்பட்ட 12 பேரையும் ராணுவத்தினர் விடுவித்தனர். இதற்கிடையே, டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் சந்தித்து பேசினார்.அப்போது, மணிப்பூரில் தற்போது உள்ள நிலவரம் குறித்து விளக்கினார்.

The post மணிப்பூரில் ராணுவத்தினரை சுற்றி வளைத்த கிராம மக்கள்:கைது செய்த 12 பேர் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Meiteis ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...