×

உலக கோப்பை தகுதிச்சுற்று அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை:கருணாரத்னே சதம் விளாசினார்

ஹராரே: ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் 14வது போட்டியில் நேற்று இலங்கை-அயர்லாந்து அணிகள் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிரினி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இலங்கையின் தொடக்க வீரர்களாக நிசங்கா-கருணாரத்னே ஜோடி களமிறங்கியது. நிதானமாக ஆடிய நிலையில், 9வது ஓவரில் பர்ரிமெகர்தி பந்தில், 20 ரன்னில் நிசங்கா விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெண்டீஸ், சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து 3வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவுடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர்.

அபாரமாக ஆடிய சமரவிக்ரமா 82 ரன் அடித்திருந்தபோது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கருணாரத்னே சதமடித்தார். 38வது ஓவரில் 103 ரன் (8 பவுண்டரி) எடுத்திருந்த கருணாரத்னே, மார்க் அடைர் பந்தில் போல்டானார். அடுத்து வந்த வீரர்களில் அசலங்கா 38, டிசில்வா 42 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்மிழக்க 49.5 ஓவரில் இலங்கை 325 ரன் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து தொடக்க வீரர்கள் மேக்பிரைன்-ஸ்டெர்லிங் களமிறங்கினர். லகிருகுமாரா வீசிய 4வது ஓவரில் ஸ்ெடர்லிங் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் இலங்கை பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். 31 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து அயர்லாந்து 190 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர்39 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட் வீழ்த்தினார். சதமடித்த கருணரத்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து வெற்றி: மற்றொரு லீக் போட்டியில் புலவாயோ ஸ்டேடியத்தில் ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 320 ரன் குவித்தது. அந்த அணியின் மேக்மல்லன் (136 ரன், 14 பவுண்டரி, 3 சிக்ஸ்) சதமடித்தார். அடுத்து களமிறங்கிய ஓமன் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. குஷி மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 69 ரன் எடுத்தார். 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 244 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 76 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கிரீஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். இவ்வெற்றி மூலம் ஸ்காட்லாந்து அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றது.

The post உலக கோப்பை தகுதிச்சுற்று அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை:கருணாரத்னே சதம் விளாசினார் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ireland ,World Cup Qualifiers ,Karunaratne ,Harare ,ICC World Cup Qualifier ,Queen's ,Sports Club ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...