×

உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தமிழ்நாடு மாநில நீதித்துறை உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 1ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட அன்றே தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு(சட்டம்) படித்தவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மெயின் தேர்வு அக்டோபர் நடக்கிறது. அதாவது, அக்டோபர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மொழியாக்கம் தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை முதல் தாள்(சட்டம்) தேர்வு நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3ம் தாள் தேர்வும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government Personnel Examination Committee ,DNPSC ,Tamil Nadu State Judiciary ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...