×

திருக்குறுங்குடி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம்

நெல்லை,ஜூன் 25: திருக்குறுங்குடி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் நம்பிகோவில் பீட் விளக்கெண்ணைய் கசம் பகுதி தடை செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இப்பகுதியில் நேற்று திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனவர் முத்தையா, வனக்காப்பாளர்கள் சார்லஸ்குமார், செல்வமணி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் அத்துமீறி நுழைந்து, மது அருந்தி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கூந்தங்குழியை சேர்ந்த அந்தோணி மிக்கேல் மகன் அன்னமரியான் (37), எட்வின் மகன்கள் கபில்தேவ் (28), ஜெய்ஸ் (20), செல்வம் மகன் அந்தோணி (30), ஆல்டிரின் மகன் டிகோ (23), சந்தியா மகன் ஆம்ஸ்ட்ராங் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதன் பின் 6 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வன சரகர் யோகேஸ்வரன் கூறுகையில், ‘இதுபோல தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவது வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். எனவே இவ்வாறு அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post திருக்குறுங்குடி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tirukurungudi ,Nellai ,Thirukurungudi ,
× RELATED மனைவியை சரமாரியாக வெட்டியவருக்கு வலை