×

கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத்துறையில் வீர, தீர செயலர்களில் ஈடுபட்டுள்ள மகளிர், கல்பனா சாவ்லா விருதிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இது குறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு வீர, தீர செயல்கள் செய்த மகளிருக்கு, கல்பனா சாவ்லா விருதினை நிறுவியுள்ளது. இவ்விருது வீர, தீர செயல்கள் புரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மகளிருக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. எனவே, விளையாட்டுத்துறையில் வீர, தீரசெயல்களில் ஈடுபட்ட மகளிர் தங்களது கருத்துருக்களை, அடிப்படை குறிப்புகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வருகிற 28ம் தேதிக்குள் கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். இணையதளம் வழியாக பதிவு செய்பவர்கள் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Veera ,Thira ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே...