×

276 பேருக்கு ₹6.99 கோடியில் நல உதவிகள்

நாமகிரிப்பேட்டை, ஜூன் 25: கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து, 276 பயனாளிகளுக்கு ₹6.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, நாமக்கல் சின்ராஜ் எம்பி, பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவ முகாமை துவக்கி வைத்து, 276 பயனாளிகளுக்கு ₹6.99 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நலத்துறை சார்பில், ₹1.09 கோடி மதிப்பில் 166 பயனாளிகளுக்கு இணையவழி வீட்டுமனை பட்டா, ₹4.88 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, மகளிர் திட்டம் சார்பில் ₹3.18 கோடி மதிப்பில் 28 பெண்களுக்கு கிராமப்புறம் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி, ₹1.79 கோடி மதிப்பில் 15 பெண்களுக்கு நகர்ப்புறம் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி வழங்கினார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 தாய்மார்களுக்கு தாய் சேய் நல உதவி பெட்டகம், தாட்கோ சார்பில் ₹44.44 லட்சம் மதிப்பில் 18 பழங்குடியினருக்கு தொழில் முனைவோர் திட்ட கடனுதவி, ₹4 லட்சம் மதிப்பில் ஒரு பழங்குடி பயனாளிக்கு சுய வேலைவாய்ப்பு திட்ட கடனுதவி, ₹3.75 லட்சம் மதிப்பில் ஒரு பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பொருளாதார கடனுதவி என மொத்தம் 276 பயனாளிகளுக்கு ₹6.99 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை கிடைக்க, 7 நலவாழ்வு மையங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம், ஏழை, எளிய மக்களுக்கு தினந்தோறும் அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் 48 மணி நேரத்தில் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள, இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை, மக்களுக்காக தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து, 5 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சுகந்தி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர் பூங்கொடி, தாசில்தார் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர்கள் லோகாம்பாள், சேரன், துணைத்தலைவர்கள் செல்வராஜ், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு, டிஆர்ஓ மணிமேகலை தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் முன்னிலை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து, 159 பயனாளிகளுக்கு ₹3.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், ஆர்டிஓ கௌசல்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், தாசில்தார் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 276 பேருக்கு ₹6.99 கோடியில் நல உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Minister ,Mathiventhan ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்