×

முருகன் கோயிலில் வளர்பிறை சஷ்டி வழிபாடு; மணப்பாறை அருகே என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பர் திருத்தல தேர்பவனி

மணப்பாறை ஜூன்25: மணப்பாறை அடுத்த என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பர் திருத்தல திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புனிதரின் பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான புனித ஸ்நாபக அருளப்பர் திருத்தலம் உள்ளது. இவ்வாலய திருவிழா கடந்த ஜூன் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 9ம் நாள் திருவிழாவில் புனிதரின் மின் அலங்கார ரத பவனி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று புனிதரின் பெரிய தேர் பவனி நடைபெற்றது. புனித ஸ்நாபக அருளப்பர், மாதா, சூசையப்பர் ஆகியோர் வீற்றிருக்க தேரடியிலிருந்து புறப்பட்ட பெரிய தேர், செபஸ்தியார், பெரிய அந்தோணியார், மேரி மாதா, சவரியார் மற்றும் சின்ன அந்தோணியார்,

இன்னாசியார் சொரூபங்கள் அலங்கார ரதத்தில் உடன் வர வாணவேடிக்கைகளுடன் தாரை தப்படைகள் முழங்க புனிதரின் பெரிய தேர் பவனி நடைபெற்றது. திருத்தலத்தை சுற்றி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்உலா வந்து மீண்டும் தேரடியில் நிலைகொண்டு நிறுத்தப்பட்டது. தேரில் பவனி வந்த புனிதர்கள் மீது பக்தர்கள், இறையன்பர்கள் பொட்டுக்கடலை வீசி வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதலின் நேர்த்திக்கடனாக ஆலயத்திற்கு துடைப்பம், உப்பு, மெழுகுவர்த்தி ஆகியவை செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்டு பிரான்சிஸ், ஊர் நாட்டாமை அருள்சுந்தரராஜன், மணியம் ஜான் நல்லதம்பி, பெரிய தனம் ஜான்பெலிக்ஸ் செல்வநாதன், முன்னாள் தலைவர் வின்சென்ட் வேதராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post முருகன் கோயிலில் வளர்பிறை சஷ்டி வழிபாடு; மணப்பாறை அருகே என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பர் திருத்தல தேர்பவனி appeared first on Dinakaran.

Tags : Vakrapira ,Shashti ,Murugan Temple ,N. Phoolampatti ,St. Snapaka Arulpar Thirthala Therpavani ,Manaparai ,Phoolampatti St. Snapaka Arulpar ritthala festival ,N. Phoolampatti St. Snapaka Arulpar Thirthala ,Therpavani ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்