×

வெண்குடி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் சமுதாயக்கூடம்

வாலாஜாபாத், ஜூன் 25: வெண்குடி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் சமுதாயக்கூடத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், இ-சேவை மைய கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், இங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக இதே கிராமத்தை சார்ந்த வெண்குடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டன. இதில் பிறந்தநாள் விழா, காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை மக்கள் இந்த சமுதாய கூடத்தில் செய்து வந்தனர். தற்போது, இந்த சமுதாயக்கூடம் முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்துள்ளது. மேலும் சமுதாய கூடத்துக்கு தேஐயான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

இதனால் கிராம மக்கள், தங்களின் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு வாலாஜாபாத், ஏகனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்த வேண்டிய சூழல் நிலவுகின்றன. இதனால், அதிகளவு பொருட்செலவு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம், வெண்குடி சமுதாய கூட்டத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகள் நிறைந்த மேம்படுத்தப்பட்ட சமுதாய கூடமாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வெண்குடி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் சமுதாயக்கூடம் appeared first on Dinakaran.

Tags : Venkudi ,Wallajahabad ,Dinakaran ,
× RELATED கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு