×

2236 பேர் பங்கேற்று பயன்: திருமயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருமயம்.ஜூன்25: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஸ்டேட் பேங்க் அருகே உள்ள ஜோசப் கண் பரிசோதனை மையத்தில் வருமுன் காப்போம் திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இணைத்து நேற்று சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தொடங்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு விழித்திரை நோய்களுக்கான அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான கண்புரை அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் , ரெப்பை மூடுதல் நீக்குதல், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு தங்களது கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் பெற்றனர். இந்த முகாமில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post 2236 பேர் பங்கேற்று பயன்: திருமயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Thirumayat ,Tirumayam.June ,Joseph ,Eye ,Examination Center ,Tirumayam State Bank ,Pudukottai District ,Tirumayam ,
× RELATED புதுக்கோட்டை, திருமயத்தில் தமிழ்நாடு...