- கலைஞர்
- நூற்றாண்டு முன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- திருமுல்லைவாசல்
- சீர்காழி
- நூற்றாண்டு
- முன்னோக்கு மருத்துவ முகாம்
- திருமுல்லை வாசல் அரசு மேல்நிலைப் பள்ளி
- சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி,ஜூன் 25: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லை வாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர். முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை சிறுநீர் சோதனை, எக்கோ, ஈசிஜி, முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றன.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். விழாவில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மலர்விழி திருமாவளவன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன், மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அஜித்பிரபுகுமார், மாவட்ட திட்ட அலுவலர் அருண் பிரசாத், திருமுல்லைவாசல் மருத்துவ அலுவலர் நர்கீஸ், காப்பீடு திட்ட அலுவலர் பாலாஜி, கண் மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள், அலுவலர்கள், நரசிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
The post சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் கலைஞரின் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.