×

ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து கொக்கூரணிக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ் மங்கலம், ஜூன் 25: ஆர்.எஸ் மங்கலத்தில் இருந்து அன்னை நகர், புல்ல மடை வழியாக கொக்கூரணி வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள அன்னைநகர், சொக்கன் பச்சேரி, ராமநாதன் மடை, இரட்டையூரணி, புல்ல மடை, வீரிபச்சேரி, ஆதித்தன் குடியிருப்பு, மணியன் பச்சேரி, புல்லமடை, வல்லமடை, மேலமடை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு ஆர்.எஸ் மங்கலம் டவுனுக்கு தான் வரவேண்டும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருந்து ஆர்.எஸ் மங்கலம் செல்வதற்கான பஸ் வசதி கிடையாது

இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ் மங்கலம் வர வேண்டும் என்றால் வல்லமடை, மேலமடை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் சுமார் 5 கிமீ தூரம் சென்று பஸ் ஏறி வர வேண்டும் இல்லை என்றால் சவேரியார்பட்டினம் பஸ் ஸ்டாப் சென்று தான் பஸ் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமப் பகுதிகளுக்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் பெரும் கஷ்டமாக இருக்கு பல கிலோ மீட்டர் தூரம் சென்று பஸ் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து எங்கள் பகுதி பொதுமக்கள் சார்பாக கடந்த ஆட்சியில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தற்போதைய திமுக ஆட்சியில் எங்கள் பகுதி பொதுமக்களின் நலன் கருதி பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

The post ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து கொக்கூரணிக்கு பஸ் இயக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Kokurani ,Annai Nagar ,Bulla Mata ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி