×

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வாரச்சந்தைக்கான வருடாந்திர குத்தகை ஏலத்தொகை ரூ.41.40 லட்சம் வசூலானது

திருவாடானை, ஜூன் 25: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வாரச்சந்தைக்கான வருடாந்திர குத்தகை ஏலத்தொகை ரூ.41.40 லட்சம் வசூலானது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயம் பாண்டிய நாட்டின் பதினான்கு ஸ்தலங்களில் எட்டாவது ஸ்தலமாகும். இந்த சிவாலயத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் ஒவ்வொரு பிரதி வாரமும் திங்கள்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இந்த வார சந்தைக்கான வருடாந்திர குத்தகை ஏலம் நடைபெறும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர குத்தகை ஏலமானது திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தேவஸ்தான செயல் அலுவலர் பாண்டியன் மற்றும் ஏலத்திற்கான வைப்புத்தொகை செலுத்தியவர்களும், கோவில் நிர்வாக ஊழியர்களும் உட்பட ஏலத்தில் பலர் கலந்து கொண்டனர். இந்த குத்தகை ஏலத்தில் அதிகபட்ச தொகையாக ரூ.41.40 லட்சத்திற்கு கோனேரிக்கோட்டை செந்தில் என்பவர் வாரச்சந்தைக்கான குத்தகை ஏலத்தை கேட்டதால் ஏலத்தொகை உறுதி செய்யப்பட்டது. இந்த ஏலத் தொகையான ரூ.41.40 லட்சத்தை தேவஸ்தான நிர்வாக கணக்கில் அதிகாரிகள் உடனடியாக வரவு வைத்தனர்.

The post திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வாரச்சந்தைக்கான வருடாந்திர குத்தகை ஏலத்தொகை ரூ.41.40 லட்சம் வசூலானது appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Adhirethineswarar temple ,Thiruvadanai ,Adirethineswarar Temple ,Thiruvadanai Adhiredhineswarar Temple ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...