×

கோவை சிறையில் இருக்கும் பாஜ பெண் பிரமுகரை மீண்டும் கைது செய்தது சென்னை போலீஸ்: நடிகர் விஜய் மீதான அவதூறு வழக்கில் அதிரடி

கோவை : பெரியார் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய் குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்கில் கைதாகி கோவை சிறையில் இருக்கும் பாஜ பெண் பிரமுகரை சென்னை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பாஜ உறுப்பினர் உமா கார்த்திகேயன். இவர் உமா கார்க்கி என்ற பெயரில் டிவிட்டர் உட்பட பல்வேறு சமூகவலைதள பக்கத்தில் பெரியார் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அமைச்சர்கள் நடிகர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகாரின்படி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து உமா கார்க்கியை கடந்த 19ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் உமா கார்க்கியை கோவை சைபர் கிரைம் போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் உமா கார்க்கி மீது சென்னை வேளச்சேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக புகார் தரப்பட்டு வழக்கு பதிவானது. இந்த வழக்கில் உமா கார்க்கியை மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் இருந்த உமா கார்க்கியை சென்னை போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

The post கோவை சிறையில் இருக்கும் பாஜ பெண் பிரமுகரை மீண்டும் கைது செய்தது சென்னை போலீஸ்: நடிகர் விஜய் மீதான அவதூறு வழக்கில் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Gov ,Vijay ,Govai ,Periyar ,CM ,G.K. Kaidikhi Kodai ,Stalin ,Goa ,
× RELATED பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை