×

மோசடி வழக்கில் மாநில தலைவர் கைது: கேரளா முழுவதும் காங்கிரசார் போராட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போலி புராதனப் பொருட்களை விற்பனை செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த மோன்சன் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சுதாகரன் குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜரானார். 7 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். சுதாகரன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன் கேரளா முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.

நேற்றும் கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இன்றும் போராட்டம் தொடரும் என்று காங்கிரசார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சுதாகரன் அறிவித்தார். ஆனால் அவரது முடிவை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது.

The post மோசடி வழக்கில் மாநில தலைவர் கைது: கேரளா முழுவதும் காங்கிரசார் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Kerala ,Thiruvananthapuram ,Monson ,Dinakaran ,
× RELATED நீட் போராட்டத்தில் அனிதா தியாகி: கேரளா காங்.பரபரப்பு டிவிட்