×

கலைப்பொருட்கள், மேஜிக் புத்தகங்கள் விற்பனை போலியாக சிஇஓ கடிதம் தயாரித்து மாணவர்களிடம் நூதன மோசடி: புதுடெல்லியை சேர்ந்த 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த ஒருவர், தலைமையாசிரியரை சந்தித்து சிஇஓ கொடுத்த கடிதம் எனக் கூறி ஒரு கடிதத்தை காட்டி பள்ளி மாணவ, மாணவிகளிடம் மேஜிக் புத்தகம், காகித கலைப்பொருட்கள் விற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தலைமையாசிரியர் தகவலையடுத்து சிஇஓ நசாருதீன் இதுபற்றி திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பள்ளிக்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் புதுடெல்லியை சேர்ந்த மேக்ராஜ்ராய் (62) என்பதும், தனியார் விடுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. புதுடெல்லியைச் சேர்ந்த ரோஹித்ராய் (22), சமன்பாய் (22), அஜய்ராஜ் (23), மகேந்திரராய் (30) ஆகியோரும் மோசடியில் ஈடுபட்டதாக கூறினார். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகையில் அவரது கையெழுத்தை ஸ்கேன் செய்து, போலி கடிதம் தயார் செய்ததாகக் கூறினர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கலைப்பொருட்கள், மேஜிக் புத்தகங்கள் விற்பனை போலியாக சிஇஓ கடிதம் தயாரித்து மாணவர்களிடம் நூதன மோசடி: புதுடெல்லியை சேர்ந்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : New Teli ,DINDUGUKAL ,Aathur Government High School ,Dintukal District ,New New Delli ,
× RELATED திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை...