×

எடப்பாடிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி: செல்லூர் ராஜூ லக லக

மதுரை: பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கு மட்டுமே உள்ளது என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுக்கு மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரி தான். எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது. எனவே கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. விஜய் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. தமிழர் பிரதமராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். இவ்வாறு தெரிவித்தார். செல்லூர் ராஜூவின் இந்த பேட்டிக்கு நெட்டிசன்கள் மீம்சில் அமெரிக்க ஜனாதிபதி பதவிலாம் கொடுத்தா வாங்க மாட்டாரா??! என்று கிண்டலடித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது -செல்லூரார்..
ஏன்.. இந்த அமெரிக்க ஜனாதிபதி பதவிலாம் கொடுத்தா வாங்க மாட்டாரா??!

* அண்ணாமலையாவது… உண்ணாமலையாவது…?
பேட்டியின்போது செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள், பாஜ தலைமையிலான கூட்டணியே அமையுமென மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறாரே? என்றனர். இதனைக் கேட்டு உச்சகட்ட ஆத்திரத்திற்கு ஆளான செல்லூர் ராஜூ, ‘‘அண்ணாமலையாவது, உண்ணாமலையாவது… அவரெல்லாம் என்ன சொல்றது? தலைமை தாங்குறது அதிமுகதாங்க’’ என்றார்.

The post எடப்பாடிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி: செல்லூர் ராஜூ லக லக appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Sellur Raju Laka ,Madurai ,Sellur Raju ,Former ,AIADMK ,minister ,Sellur Raju Laka Laka ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்