×

4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!

கெய்ரோ: 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டிற்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் இன்று தனி விமானத்தில் எகிப்து சென்றடைந்தார். பிரதமர் மோடியை எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசி விமான நிலையத்திற்கே வந்து நேரில் வரவேற்றார்.

எகிப்து பிரதமருடன் வட்டமேஜை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 2023-ல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, எகிப்துக்கு பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Egypt ,Cairo ,US ,Modi ,Narendra ,Prime Minister of India Narendra Modi ,
× RELATED தேசிய ஜனநாயகக்கூட்டணி மத்தியில்...