×

டெஸ்ட் சாம்பியன் ஷிப் தான் பறிபோய் விட்டது: உலக கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.! கவாஸ்கர் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போய்விட்டது. நாம் அதை தவறவிட்டோம். இப்போது அடுத்த பெரிய விஷயம் அக்டோபரில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை. எனவே முக்கிய வீரர்களுக்கு டெஸ்ட்டில் இருந்து முழு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். தற்போது ஒயிட்பால்(ஒன்டே) கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதியான அவர்களுக்கு முழு ஓய்வு கொடுங்கள். சீனியர் வீரருக்கும் ஓய்வு கொடுத்து, இன்னும் சில இளம் வீரர்களை டெஸ்ட்டில் சேர்த்திருந்தால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலத்தை அளித்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு அற்புதமான வாய்ப்பு தவறவிட்டதாக நான் நினைக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

மேலும் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் தோல்விகளுக்கு புஜாரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட்டின் விசுவாசமான சேவகர், அமைதியான மற்றும் திறமையான சாதனையாளர். ஆனால் எந்த சமூகதளத்திலும் அவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இல்லை என்பதால், அவர் கைவிடப்பட்டால் யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள் என்பதால் நீங்கள் அவரை கைவிடுகிறீர்களா?. இது புரிந்துகொள்ள முடியாத ஒன்று. அவரை நீக்குவதும், மற்றவர்களை வைத்துக்கொள்வதும் என்ன அளவுகோல். இப்போதெல்லாம் அணி அறிவிப்புக்கு பின் தேர்வுக் குழுதலைவரோஅல்லது உறுப்பினர்களோ செய்தியாளர்களை சந்திப்பதில்ல. இதனால் இந்தக் கேள்விகளை நீங்கள் உண்மையில் யாரிடம் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார்.

The post டெஸ்ட் சாம்பியன் ஷிப் தான் பறிபோய் விட்டது: உலக கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.! கவாஸ்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Test Championship ,World Cup ,Gavaskar ,Mumbai ,World Test Championship ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு