×

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்ச பேரம் பேசிய ஆய்வாளர், எஸ்.ஐ.மீது வழக்கு

சென்னை: ரூ.600கோடி மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்ச பேரம் பேசிய ஆய்வாளர், எஸ்.ஐ.மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்.பி பெயரில் முன்பணமாக ரூ.15 லட்சம் பெற்ற காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.10 லட்சத்தை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் பெற்றதும் அம்பலமாகியுள்ளது.

காவல் ஆய்வாளருடன் சென்ற எஸ்.ஐ.கண்ணன் ரூ.5 லட்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. தஞ்சை எஸ்.பிக்கு புகார் சென்ற நிலையில் இருவர் மீதும் விசாரணை நடத்த டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணையில் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் லஞ்சம் பெற்றது உறுதியானது.

லஞ்சம் பெற்ற இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், சாமிநாதனுக்கு எதிராக முதன்முறையாக தஞ்சையை சேர்ந்த ரகுபிரசாத், சீனிவாசன் புகாரளித்தனர். நடவடிக்கை எடுக்காமலிருக்க ரூ.1 கோடி வேண்டும் என தஞ்சை எஸ்.பி பெயரை கூறி ஆய்வாளர்,எஸ்.ஐ.பணம் கேட்டுள்ளனர்.

The post ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்ச பேரம் பேசிய ஆய்வாளர், எஸ்.ஐ.மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : S.S. ,Chennai ,Dinakaran ,
× RELATED மோடி தெய்வ மகன் கிடையாது டெஸ்ட் டியூப்...