×

திருப்பூர் காதர்பேட்டை தீ விபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்காலிகமாக கூரை அமைத்து கடைகள் நடத்தி வருகின்றனர். இரவு 9.30 மணி அளவில் கடை ஒன்றில் தீ பிடித்து மளமள வென மற்ற கடைகளுக்கு பரவியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளை முடுக்கிவிட்டனர். கடைகள் அனைத்தும் முற்றிலும் எறிந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்வாய்ப்பாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடைகள் முற்றிலும் சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக பஜாரில் இருந்த கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்விடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடை அமைத்திருந்த வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் அமைத்துக் கொள்ளும் பணி துவங்கப்படும் என்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயாரித்து அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உடனே கடைகளை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post திருப்பூர் காதர்பேட்டை தீ விபத்தில் சேதமான 50கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Katharpet ,Minister ,Saminathan ,Tirupur Katharpet fire ,Tirupur… ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்