×

மாநிலத்தில் முதன்முறையாக கல்வியும், காவலும் திட்டம் பெரம்பலூரில் அறிமுகம்

பெரம்பலூர் : தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் ‘கல்வியும் காவலும்’ என்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் காவல்நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் \”கல்வியும் காவலும்\” என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை மக்களின் நண்பன் என்பதை உணர்த்துவதற்காகவும் காவல்துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கி வைத்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி மாணவிகளிடம் பேசுகையில், தொடுதல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவிகள் எதற்கும் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை பெற்றோர்களிடம் கூறாமல் இருக்க கூடாது.அவ்வாறு கூற இயலாத சூழ்நிலையில் காவல்நிலையம் வந்து நேரடியாக புகார் அளிக்கலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்பநாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காவல்நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

The post மாநிலத்தில் முதன்முறையாக கல்வியும், காவலும் திட்டம் பெரம்பலூரில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamilnadu ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...