×

கூடலூர் அருகே பராமரிப்பு இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பராமரிப்பு இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் நீலகிரி அருகே மார்த்தமோ நகரில் தமிழ்நாடு அரசு ஊழியருக்கான வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதில் தற்போது 25க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சமீப காலமாக அந்த குடியிருப்பு பழுதடைந்து மோசமாக உள்ள நிலையில் நேற்று நள்ளிரவில் பி பிளாக்யில் வீட்டின் முன்புள்ள மேற்கூரை அடைந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் வீட்டில் இருந்தோருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு வீட்டின் மேற்கூரை இதே போல இடிந்து விழுந்துள்ளது.

வீடுகளின் மேற்க்கூரைகள் இப்படி தொடர்ந்து இடிந்து வருவதால் அச்சமடைந்துள்ள குடியிருப்பு வாசிகள் மாற்று வீடுகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இடிந்து விழுந்த குடியிருப்புகளை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். உடனடியாக வீட்டு வசதி வாரியம் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கூடலூர் அருகே பராமரிப்பு இல்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Cuddalore ,Nilagiri ,Nilgiris District ,Board ,Kudalore ,Dinakaran ,
× RELATED தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை...