×

சென்னை மாநகரில் பேருந்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை: தரம் சேவையை மேம்படுத்த போக்குவரத்துக் கழகம் கள ஆய்வு

சென்னை: சென்னை பேருந்து சேவையை மேம்படுத்த மாநகர போக்குவரத்துக்கு கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை நகரில் நாள்தோறும் இயக்கப்படும் 3200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். புறநகர் பகுதிகள் வரை பேருந்து சேவைகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்துக்கு மாநகர பேரூந்துகளையே பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் அவற்றின் சேவை மற்றும் தரத்தை மேம்படுத்தும் வகையில் கள ஆய்வினை மாநகர போக்குவரத்துக்கு கழக நிர்வாகம் தொடங்கியுள்ளது. பேருந்துகளின் தூய்மை, செயல் திறன், இயக்கப்படும் நேரம் பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் பாதுகாப்பு, பெண்கள், முதியோர், மாற்று திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து பல்வேறு வழித்தடங்களில் 2300 பேரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் பேருந்தில் தினமும் பயணிக்கும் பெண்கள் தங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பகிர்ந்துள்ளனர். காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐபிஆர்டி வங்கியிலிருந்து ரூ.2,400 கோடி நிதிப்பற்று பேருந்துகளின் செயல்பாடு மற்றும் சேவையை மேம்படுத்த மாநகர போக்குவரத்துக்கு கழகம் முடிவு செய்துள்ளது.

The post சென்னை மாநகரில் பேருந்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை: தரம் சேவையை மேம்படுத்த போக்குவரத்துக் கழகம் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Corporation ,Corporation for City Transport ,Chennai Nagar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...