×

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதைக்காளான் விற்பனை தம்பதி உள்பட 3 பேர் கைது

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதைக்காளான் விற்பனை செய்த தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசார் ராமராஜன், காசி, சரவணன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னவனூர் கைகாட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சைஜூ (25), மன்னவனூர் கைகாட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மனைவி உஷா (39) என்பது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை செய்து வந்தது உறுதியானது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த போதை காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரும் மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.

The post கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதைக்காளான் விற்பனை தம்பதி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Melammalai ,Kodaikanal ,Kodaikanal Melamalai ,Dindigul ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை