×

திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் சர்வதேச யோகா தின விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தஞ்சாவூர்  காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தனது ஊழியர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணும் விதமாக யோகா பயிற்சி பட்டறை நடத்தியது. விழாவில் யோகா டிஆர்ஜி கவுதமன் கலந்து கொண்டு யோகா செய்வதால் மனம் மற்றும் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றி, யோகா பயிற்சிகள் அளித்தார். இந்த விழாவில் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

The post திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் சர்வதேச யோகா தின விழா appeared first on Dinakaran.

Tags : Tiruvarur District Collector Information International Yoga Day ,Thanjavur Kamachi Medical Centre ,Thanjavur ,International Yoga Day ,Tiruvarur District Collector ,Thanjavur International Yoga Day ,Kamachi Medical Center ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...