×

பாடாலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் காரை பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், காரை பிரிவு சாலையில் இருந்து ஆலத்தூர்கேட் செல்லும் வழியில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும், ஓட்டல்களில் சேகரமாகும் கழிவு பொருட்களை வண்டிகளில் ஏற்றி வந்து இப்பகுதியில் கொட்டி செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுடன், மழைநீரால் நனைந்து மக்கிப்போய் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வீசுவதால் வாகன ஓட்டிகள், ஆலத்தூர் தாசில்தார் அலுவலகம், பேங்க், உணவகங்கள், போன்ற பல்வேறு தேவைக்காக இந்த சாலையில் செல்லும் போது முகம் சுழிக்க வைக்கிறது. நாற்றம் தாங்க முடியாமல் சிலர் மூக்கைபிடித்தபடி செல்கின்றனர். மேலும், குப்பை கொட்டும் இடம் அருகே நீர்வழிப் பாதையில் செல்வதால் இந்த குப்பைகள், நீர்வழி பாதையில் தண்ணீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவ்வப்போது, குவியும் குப்பையை உடனடியாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து. நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நடவடிக்கை மேற்கொண்ட இரூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

The post பாடாலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : National Highway ,Padalur ,Aladhur taluk Irur ,Karai Division ,Dinakaran ,
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...